August 25, 2018
தண்டோரா குழு
கேரளாவுக்கு மதிமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்தது.கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 324 பேருக்கு மேலாக உயிரிழந்துள்ளனர்.
பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அங்கு மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் கடுமையாக பாதித்தன.தற்போது வெள்ளம் வடிய துவங்கி விட்ட நிலையில் நிவாரண முகாம்களிலிருந்து மக்கள் வீடு திரும்பி வருகின்றனர்.
இதனால் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில்,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு மதிமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.