• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளா மக்களுக்கு உதவும் கோவை சின்மயா பள்ளி

August 16, 2018 தண்டோரா குழு

கேரளாவில் தொடர்ந்து வரும் கனமழையின் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை இழந்து தவித்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதனால் தங்களது உடமைகள் அனைத்தையும் இழந்து தவிக்கின்றனர்.

இதனையடுத்து பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளா மக்களுக்கு பொருட்கள் மற்றும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.இந்நிலையில் கோவையை அடுத்த ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளி சார்பில் கேரளா மக்களுக்கு உதவுவதற்காக பல்வேறு பொருட்கள் இன்று அனுப்பப்பட்டது.

இதில் பொதுமக்களுக்கு தேவையான,பிரட்,பால் பவுடர்,அரிசி,பருப்பு உள்ளிட்ட 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கோவையில் இருந்து கேரளாவிற்கு எடுத்து செல்லப்பட்டது.இதனை அந்த பள்ளியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் நிர்வாகத்தினர் இணைந்து இந்த உதவும் பணியை செய்து உள்ளனர்.

மேலும் பள்ளி மாணவர்களும் ஆர்வமுடன்,பொருட்களை சேகரித்து,பார்சல் செய்து அனுப்பி வைத்தனர்.தன்னார்வலர்களை கொண்டு இந்த பொருட்கள் கேரளா பொதுமக்களுக்கு வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க