• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரள முதல்வரிடம் 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர் நடிகர் கார்த்தி

August 16, 2018 தண்டோரா குழு

கேரளாவில் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்து வருவதால் நிலச்சரிவு மற்றும் கனமழையால் இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர்.50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் கேரள மக்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருக்கின்றனர்.தமிழ்த்திரையுலகினர்
சார்பில் நடிகர்கள் கமல்,விஷால்,நடிகை ரோஹிணி,ஸ்ரீபிரியா உள்ளிட்ட பலர் ஏற்கனவே நிதி உதவிகள் அளித்துள்ளனர்.அதைபோல் நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் கேரள மக்களுக்காக 25 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில்,இன்று திருவனந்தபுரம் சென்ற நடிகர் கார்த்தி கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் 25 லட்சம் ரூபாக்கான காசோலையை வழங்கினார்.

மேலும் படிக்க