• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் பிஷப் பிராங்கோவிடம் 3வது நாளாக விசாரணை

September 21, 2018 தண்டோரா குழு

கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கொச்சியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பிஷப் பிராங்கோவிடம் 5பேர் கொண்ட குழு 3வது நாளாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் ஃப்ராங்கோ மூலக்கல் என்பவர் தன்னை 2014 முதல் 2016 வரை கேரளாவில் உள்ள ஒரு கான்வெண்டில் வைத்து தனது ஒப்புதலின்றி 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார்.இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவனந்தபுரம் போலீசார்,ஜலந்தர் பகுதிக்கு சென்று பிஷப் ஃப்ராங்கோ மூலக்கல்லிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் பிராங்கோ முல்லக்கல் இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு நேற்று முன்தினம் ஆஜரானார்.கடந்த இரண்டு நாளாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில்,இன்று மூன்றாவது நாளாக விசாரணை தொடர்கிறது.

மேலும் படிக்க