October 15, 2018
தண்டோரா குழு
கரூர் முதல் கோவை இடையேயான ஆறுவழி பசுமை சாலை திட்டத்தை,தமிழக முதல்வர் கைவிடக்கோரி,கோவையில் தலைப்பாகை கட்டி விவசாயிகள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இன்று மனு அளித்தனர்.
கரூர் முதல் கோவை வரை தேசிய நெடுஞ்சாலை 67 அமைக்கவும்,அதனோடு புறவழிச்சலை அமைக்க மத்திய மாநில அரசுகள் 2400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, நிலத்தை அளந்து வருவது குறிப்பிடத்தக்கது.இத்திட்டத்தால் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள்,கால்நடைகள் அழிவதற்கு வாய்ப்பாக அமையும்.தமிழக முதல்வர் அண்மையில் பாரதப்பிரதமரிடம் தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை பாதிக்கின்ற எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆறுவழி பசுமை சாலையை,தமிழக அரசே கைவிட்டு,ஏற்கனவே இருக்கின்ற தேசிய நெடுஞ்சாலை 81ஐ விரிவாக்கம் செய்தால் விளை நிலங்கள் பாதுகாப்பதோடு,திட்டத்திற்கான செலவும் குறைவதற்கு வாய்ப்புள்ளது.தமிழக முதல்வர் விவசாயிகள் பாதிக்காத வண்ணம் கரூர்- கோவை இடையேயான ஆறுவழிசாலையை கைவிட வேண்டி தலைப்பாகை கட்டி அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர். மேலும்,முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் கால்நடைகளை கொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த இருப்பதாக தெரிவித்தனர்.