September 27, 2018
தண்டோரா குழு
கர்நாடகாவில் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற காவலர் ஒருவர் வயலில் வேலை செய்துக் கொண்டிருந்த தன் தாயின் காலில் விழுந்து ஆசி பெற்ற புகைப்படம் பார்ப்போரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தாய் ஒருவர் தன் கணவர் இழந்த பின்பும் தன் மகனை பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலும் வளர்த்து ஆளாக்கியுள்ளார்.அந்த மகனும் காவல் ஆய்வாளர் பணிக்கு தேர்வானார்.ஆனால்,மகன் காவல் ஆய்வாளர் பதவி ஏற்கும் விழாவில் வயலில் வேலை இருந்த காரணத்தினால் அந்த தாயால்
பங்கேற்க முடியாமல் போனது.
இதையடுத்து,நிகழ்ச்சி முடிந்ததும் நேராக வயலுக்கு ஓடி வந்த அந்த காவலர் வயலில் வேலை செய்துக் கொண்டிருந்த தன் தாயை பார்த்ததும் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி உள்ளார்.இதனை பார்த்த அக்கம்பக்கதினர் நெகிழ்ந்து போயினர்.
இந்நிலையில்,இந்த சம்பவத்தை பாஸ்கர் ராவ் என்ற ஐபிஎஸ் அதிகாரி தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.தற்போது இந்த படத்தை 15 லட்சம் பேர் லைக் செய்து உள்ளனர்.மேலும் 3,500க்கும் மேற்பட்டோர் ரிடுவீட் செய்துள்ளனர்.இதனால் அந்த தாய்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.