• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரள காவல்துறையை கண்டித்து கன்னியாகுமரியில் பாஜக சார்பில் கடையடைப்பு !

November 23, 2018 தண்டோரா குழு

சபரிமலைக்கு சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை அவமதித்த கேரள காவல்துறையை கண்டித்து கன்னியாகுமரியில் பாஜக சார்பில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.

சபரிமலைக்கு கடந்த 20-ந் தேதி இருமுடிக்கட்டுடன் காரில் சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிலக்கல் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டார். அவருடன் வந்திருந்த பாரதிய ஜனதா தொண்டர்களின் கார்களை பம்பைக்கு அனுமதிக்காததால்,அவர்கள் அரசு பஸ்சில் சபரிமலைக்கு சென்றார்.

பின்னர் சாமி தரிசனம் முடித்து திரும்பும் வழியிலும் பொன் ராதாகிருஷ்ணனுடன் சென்ற தொண்டர்களின் கார் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தினர்.இதையடுத்து, பாஜக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில்,மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை அவமதித்த கேரள காவல்துறையை கண்டித்து கன்னியாகுமரியில் பாஜக சார்பில் இன்று முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இதனையடுத்து அங்கு கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரியிலிருந்து கேரளாவிற்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வரும் பஸ்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்படுகின்றன. முழு அடைப்பால் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.பேருந்துகள் இயக்கப்படாததால் வேலைக்கு செல்பவர்கள்,பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.பாரதிய ஜனதா கட்சியினரின் போராட்டம் காரணமாக தமிழக-கேரள எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க