• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தொழிலதிபர் மகனைக் கடத்திய திரைப்பட நாயகன் அதிரடி கைது பெங்களூரில் சினிமா பாணியில் சம்பவம்

August 31, 2016 தண்டோரா குழு

பிரபல தொழிலதிபர் மகனைக் கடத்தி பணம் பறிக்க முயன்ற கன்னட திரைப்பட கதாநாயகனை காவல்துறை அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்துள்ள சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிர்லோஸ்கர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விநாயக் பபத். இவரது 19 வயது மகன் இஷான் கோகிலு கிராஸ் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 23ம் தேதி அவரது கல்லூரி அருகில் மர்ம நபர்களால் காரில் கடத்தி செல்லப்பட்டார்.

இதையறிந்த விநாயக் தன் மகன் கடத்தப்பட்ட சம்பவத்தைக் குறித்து காவல்துறைக்குப் புகார் கொடுத்தார். அவருடைய புகரை ஏற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரிகள், அவ்வழக்கின் தீவிரத்தை புரிந்து கொண்டு உடனடியாக இதில் கவனம் செலுத்தினர். அவர்களுடைய தீவிர முயற்சியால் இஷான் நேற்று மீட்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பெங்களூர் வடகிழக்கு மண்டல துணை கமிஷனர், பி.எஸ்.ஹர்ஷா கூறும்போது, வழக்கின் முக்கியத்துவத்தை உணர்ந்து மொத்தம் 10 தனிப்படைகளை அமைத்தோம். நகரைச் சுற்றிலும் வாகன சோதனையை தீவிரப்படுத்தினோம். இஷான் எங்குக் கொண்டு செல்லப்படுகிறார் என்பதை பல்வேறு வழிகளில் போலீசார் கண்காணித்தபடியே இருந்தனர்.

இதனால், நகரைவிட்டு வெளியேற முடியாமல் கடத்தல் கும்பல் தடுமாறியது. அதிகாலை வேளையில் தும்கூர் தப்பிச் செல்ல முயன்ற போது, அங்கும் வாகன சோதனை இருப்பதைப் பார்த்து பெங்களூருக்கே திரும்பி வந்தது கடத்தல் கும்பல். ஒரு கட்டத்தில் காவல்துறையிடமிருந்து தப்ப முடியாது என்ற எண்ணம் கடத்தல் கும்பலுக்கு வந்துவிட்டது.

இதையடுத்து ஹெப்பால் அருகே காரை நிறுத்தி இஷானை வெளியே தள்ளிவிட்டு, அந்தக் கும்பல் தப்பியோடியது. போலீசார் இஷானை மீட்டனர். மேலும், கடத்தல்காரர்களை போலீசார் பின் தொடர்ந்து சென்று கடத்தலில் ஈடுபட்ட முனியப்பா(28), ஹசன் டோங்கிரி(26), ஜெகதீஷ்(32), ஜகன்நாதா(28), மனோஜ்(19) ஆகியோரைக் கைது செய்தனர் என்று தெரிவித்தார்.

மேலும், சேலஞ்சர் என்ற கன்னட திரைப்படத்தை முனியப்பா தயாரித்து அதில் நடித்தும் வருகிறாராம் எனவும், படத்தைத் தயாரித்து முடிக்க பணம் பற்றாக்குறையானதால் தொழிலதிபர் மகனைக் கடத்தி பணம் பறிக்க முனியப்பா முடிவு செய்தார் எனவும் தெரிவித்தார். டிவி சேனல் ரியாலிட்டி ஷோ ஒன்றுக்கு முனியப்பா சென்றபோது, டோங்கிரியுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனது திட்டத்தை டோங்கிரியிடம் கூறி, அடியாட்களை ஏற்பாடு செய்து கொண்டு இந்தக் கடத்தல் நடந்துள்ளது.

மல்லேஸ்வரத்திலுள்ள இஷான் வீட்டை நோட்டமிட்டு, அவர் எப்போது வெளியே செல்வார், எங்குச் செல்வார் என்பதை 15 நாட்களாகப் பின்தொடர்ந்து சென்று அறிந்து கொண்ட கடத்தல் கும்பல் இறுதியாகக் கடத்தியுள்ளது என தெரிவித்தார். இந்த கடத்தலின் மூளையாக உள்ள முனியப்பா ஏற்கனவே செயின் பறிப்பு, ஆள் கடத்தல் வழக்குகளில் தொடர்புள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க