September 20, 2018
தண்டோரா குழு
மும்பையில் இருந்து ஜெய்ப்பூர் புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு நடுவானில் காது,மூக்கில் ரத்தம் வழிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து இன்று காலை ஜெய்ப்பூர் சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த 166 பயணிகளில் 30 பயணிகளுக்கு காது,மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.இந்த விமானத்தில் அறை அழுத்த பராமரிப்பு ஸ்விட்சை பணிப்பெண்கள் அழுத்த மறந்ததால் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது 30 பேருக்கு காது மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து விமானம் உடனடியாக மும்பைக்கு திருப்பப்பட்டு,தரையிறக்கப்பட்டது.மேலும் பயணிகள் சிலருக்கு தலைவலியும் ஏற்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவரும் மும்பை விமான நிலைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,சிகிச்சை பெற்று வருகின்றனர்.