• Download mobile app
24 Apr 2026, FridayEdition - 3726
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மக்கள் விரும்பும் போது ஜல்லிக்கட்டு..

January 22, 2017 தண்டோரா குழு

மக்கள் விரும்பும் போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறும் என தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்தக் கோரியும், இனி வரும் காலங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த நிரந்தர சட்டம் கொண்டு வரக்கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள், மக்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்டு தமிழக அரசு சார்பில் சனிக்கிழமை அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை துவங்கி வைக்க முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை சென்றிருந்தார். ஆனால் அலங்காநல்லூர் மக்கள் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வரும் வரை அதனை நடத்த அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இதனால் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைக்காமல் தமிழக முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்ப மதுரை விமான நிலையம் வந்தார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கூறுகையில்“ மக்கள் விரும்பும் போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறும் . தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டம் நீடித்த நிலையான சட்டம்.,யாராலும் ஜல்லிக்கட்டை தடுக்க முடியாது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றுவருகிறது.திங்கட்கிழமை கூடும் தமிழக சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு நடத்த கொண்டு வந்த அவசரச் சட்டம் சட்டமுன்வடிவாக தாக்கல் செய்யப்படும் ”என்றார்

மேலும் படிக்க