September 21, 2018
தண்டோரா குழு
சச்சின்,தோனிக்கு பின் உலகம் முழுவதிலும் அதிக அளவில் ரசிகர்களை கொண்டுள்ளவர் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி.கிரிக்கெட் போட்டியில் பல்வேறு சாதனைகளை புரித்துள்ள கோலி நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இருவரும் ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில்,தற்போது விராட் கோலியும் சினிமாவில் ஹீரோவாக நடிக்கப் போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,ஆக்ரோஷமான ஆக்ஷன் மூடில் விராட் கோலி சூப்பர் ஹீரோவாக வருவது போலவும் பின்னணியில் கார்கள் மோதி நிற்பது போலவும் உள்ளன.
மேலும்,இந்த போஸ்டருடன் பத்து வருடத்துக்குப் பிறகு இன்னொரு அறிமுகம்.காத்திருக்க முடியவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.வரும் 28 ஆம் தேதி இது வெளியாகிறது எனக் கூறப்பட்டுள்ளது.