September 10, 2018
தண்டோரா குழு
ஓரினச்சேர்க்கை குற்றம் என்ற சட்டத்தை நீக்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கிருஸ்தவ மத போதகர் ஒருவர் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓரினச்சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம் என்பதை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 தெரிவித்திருந்தது.இந்த சூழலில்,அந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்றும்,இது தங்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் ஓரினச்சேர்க்கையாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த சட்டத்தை நீக்கி உத்தரவு பிறப்பித்தது. இதனால்,ஒட்டுமொத்த ஓரினச்சேர்க்கையாளர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.இந்நிலையில்,உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது என்று கூறியும்,அந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற வளாகத்தில் கிருஸ்தவ மத போதகரான ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பெலிக்ஸ் ஜெபசிங் என்பவர் முழக்கங்களை எழுப்பினார்.இதனால் நீதிமன்ற வளாகத்துக்குள் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.