• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டிஜிபி ராஜேந்திரன்,அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லங்களில் சிபிஐ ரெய்டு

September 5, 2018 தண்டோரா குழு

குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ்,டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை தங்கு தடையின்றி நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து,கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 8-ம் தேதி வருமானவரித் துறையினர் சென்னை அருகே செங்குன்றத்தில் உள்ள மாதவ ராவ் உள்ளிட்டோர் பங்குதாரராக உள்ள குட்கா கிடங்கில் திடீர் சோதனை நடத்தினர்.அந்த டைரியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,சென்னை காவல்துறை ஆணையராக அன்றைய காலகட்டத்தில் இருந்த இப்போதைய டிஜிபி டி.கே.ராஜேந்திரன்,ஓய்வுபெற்ற டிஜிபி எஸ்.ஜார்ஜ் உட்பட காவல்துறையைச் சேர்ந்த 23 அதிகாரிகளின் பெயர்கள்,கலால் வரித்துறை அதிகாரிகள்,மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் லஞ்சம் பெற்றதாக குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்பட்டது.சோதனையின் போது கைப்பற்றப்பட்ட டைரி மூலம்,குட்கா ஊழல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

இந்நிலையில்,குட்கா ஊழல் விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து கடந்த மே மாதம் 30-ம் தேதி வழக்குப்பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள்,குட்கா ஊழல் விவகாரம் தொடர்பான ஆவணங்களை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைத்துறையிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

கடந்த 3 மாதமாக குட்கா ஊழல் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகள்,முதற்கட்டமாக குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவிடம் விசாரணை நடத்தினர்.அவரிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.அதிகாரிகள் எழுப்பிய சரமாரி கேள்விகளுக்கு மாதவராவ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குட்கா ஊழல் விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர்,முன்னாள் டிஜிபி ஜார்ஜ்,சென்னை முகப்பேரில் உள்ள டிஜிபி ராஜேந்திரன் வீடு,விழுப்புரத்தில் பல்பொருள் அங்காடி உரிமையாளர்,முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வீடு ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.மொத்தம் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்யும் நோக்கத்துடன் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.

மேலும் படிக்க