September 6, 2018
தண்டோரா குழு
குட்கா வழக்கில் சிபிஐ நடத்திய சோதனையின் முடிவில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர்,முன்னாள் டிஜிபி ஜார்ஜ்,சென்னை முகப்பேரில் உள்ள டிஜிபி ராஜேந்திரன் வீடு,விழுப்புரத்தில் பல்பொருள் அங்காடி உரிமையாளர்,முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வீடு ஆகியவற்றிலும் சோதனை நடத்தினர்.மொத்தம் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில்,குட்கா ஊழல் வழக்கில் குட்கா நிறுவன உரிமையாளர் மாதவ ராவ்,உமா சங்கர் குப்தா,பாண்டியன்,உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.