• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இலவச வைபை வழங்கும் கூகுள்

September 28, 2016 தண்டோரா குழு

உலகின் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் இணையதளமான கூகுள் தனது 18-வது பிறந்தநாளை முன்னிட்டு ‘கூகுள் ஸ்டேஷன்’ என்ற கட்டமைப்பு மூலம் இந்தியா முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இலவச வைபை வசதியை அளிக்க முன்வந்துள்ளது.

இதனையொட்டி ‘கூகுள் ஸ்டேஷன்’ என்ற கட்டமைப்பு மூலம் இந்தியா முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிக செயல் திறன் கொண்ட இலவச வைபை வசதியை அளிக்க அந்நிறுவனம் முன்வந்துள்ளது.

வணிக வளாகங்கள், பல்கலைக்கழகங்கள், மெட்ரோ ரெயில் நிலையங்கள்,உணவு விடுதிகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இலவச வைபை வசதியைப் பெற முடியும்.கூகுள் நிறுவனம் மத்திய ரெயில்வேயின் ‘ரெயில்டெல்’ நிறுவனத்துடன் இணைந்து ஏற்கனவே நாடுமுழுவதும் 53 ரெயில் நிலையங்களில், இலவச ‘வைபை’ வசதியை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வசதி அனைவருக்‍கும் கிடைக்‍கும் வகையில் நாடு முழுவதும் அந்நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது.

மேலும் படிக்க