• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அட…டேய் இன்னையோட கூகுள்க்கு 20 வயசு ஆச்சு..!

September 27, 2018 தண்டோரா குழு

நாம் கேட்பவற்றை அள்ளி அள்ளி தரும் அச்சயபாத்திரம் போல..,இன்றைய கணினியுலக அச்சயபாத்திரமாய் திகழும் கூகுள் நாம் கேட்கும் பல கேள்விகள், சந்தேகங்கள் என அனைத்திற்கும் விடையளிக்கிறது.அந்த கணினி உலக தேடுதல் தளமான கூகுள் இன்றைக்கு 20-வது ஆண்டில் நுழைகிறது.

100 கோடிக்கு மேலான மக்கள் பயன்படுத்தக்கூடிய தேடுதல் தளமான கூகுள்,கலிபோர்னியாவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்த லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இரு மாணவர்களால் 1998-ம் ஆண்டு ஒரு கார் நிறுத்துமிடத்தில் தொடங்கப்பட்டு இன்று உலக மக்களின் இன்றியமையாத தேடுதல் தளமாக மாறியுள்ளது.

தேடுதளத்தில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் மென்பொருட்கள்,ஆன்லைன் விளம்பரம்,வன்பொருட்கள் என இணையத்தின் அனைத்து துறைகளிலும் பறந்து விரிந்திருக்கிறது.மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் “Google is my guru” என்று அன்போடு சொல்லும் அளவிற்கு அசுர வளர்ச்சி பெற்று இருக்கிறது இந்நிறுவனம்.1 க்கு பின்நூறு பூஜ்யங்களைக் குறிக்கும் கூகால் என்ற கணித வார்த்தையைச் சார்ந்து கூகுள் என்ற பெயர் அந்த நிறுவனத்திற்கு சூட்டப்பட்டது.இதனை சிறப்பிக்கும் விதமாக சான்ஃபிரான்சிஸ்கோவில் உள்ள கூகுள் நிறுவனத்தின் 20-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

மேலும் படிக்க