September 27, 2018
தண்டோரா குழு
கோவையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் மற்றும் அரசின் சலுகைகள் கிடைப்பதற்கான அடையாள அட்டை வழங்குவதற்கான முகாம் இன்று நடைபெற்றது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.கோவை மாநகர பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் அளிக்கும் வகயில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சிறப்பு கல்வி ஆசிரியர்களின் உதவியுடன் இந்த பணிகள் செய்யப்பட்டு உள்ளது.இந்த முகாமில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.மேலும் அரசின் சலுகைகள் பெற்றுத் தருவதற்கான அடையாள அட்டை வழங்குவதற்கான முகாமும் நடைபெற்றது.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.