• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மணல் இன்று மாலை முதல் விற்பனை

September 21, 2018 தண்டோரா குழு

தூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மணல் இன்று மாலை முதல் விற்பனை செய்யப்படும் என்று தமிழகஅரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணல் விற்பனைக்கான முன்பதிவு இன்று மாலை 4 மணி முதல் தொடங்கவுள்ளது.இந்த மணலை TNsand இணையதளத்திலும்,கைபேசி செயலி மூலமாகவும்,ஆன்லைன் மூலமாகவும் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.துறைமுகத்தில் முதற்கட்டமாக 11,000 யூனிட் மணல் மட்டுமே வழங்கப்பட உள்ளது.ஆகவே முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.முன்பதிவு செய்தவர்களுக்கு அடுத்த வாரம் முதல் மணல் வழங்கப்படும்.TNsandல் பதிவு செய்யாத வாகனங்களுக்கும் மணல் வழங்கப்படும்.ஏற்கனவே மணல் விலை குறித்து உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.அதன்படி ஒரு யூனிட்(சுமார் 4.5 MT) மணல் ரூ.9,990 ஆகும்.துறைமுகத்தில் விற்கப்படும் மணல் விலை 2 யூனிட் – ரூ.19,980,3 யூனிட் – ரூ.29,970,4 யூனிட் – ரூ.39,960,5 யூனிட் – ரூ.49,950″. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க