• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பதற்கான முதல் கட்ட பணிகள் தொடக்கம்

November 29, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பதற்கான முதல் கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

முதல்வர்,அமைச்சர்கள் உள்பட மக்கள் பிரதிநிதிகள்,அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தா கொண்டுவரும் வகையில் லோக்பால் சட்டம் ஏற்கனவே மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது.இதனைத்தொடர்ந்து கடந்த ஜூலையில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில் மானிய கோரிக்கை விவாதத்தின் போது,லோக் ஆயுக்தா குறித்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில்,தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்கியதற்கான அறிவிப்பை தமிழக அரசு அரசிதழை வெளியிட்டது.லோக் ஆயுக்தா செயலாளர்,இயக்குனர்,சார்பு செயலாளர்,பதிவாளர்,சார் பதிவாளர்,ஆய்வாளர்,உதவி ஆய்வாளர் என 26 பணியிடங்களை உறுதி செய்து அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.மேலும்,லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் இந்த 26 பணியிடங்களுக்கான தகுதிவாய்ந்த நபர்களையும் தேர்வு செய்வார் என தெரியவந்துள்ளது.நாட்டில் 18-வது மாநிலமாக தமிழக அரசும் லோக் ஆயுக்தாவை தொடங்குவதாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க