• Download mobile app
04 Aug 2026, TuesdayEdition - 3828
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தி நிறுவனம் அதிக வருமானம் ஈட்டி சாதனை

September 26, 2018 தண்டோரா குழு

ஈஷா அறக்கட்டளையின் வழிகாட்டுதலின் படி செயல்பட்டு வரும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தி நிறுவனம் கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.7.91 கோடி வருமானம் ஈட்டி சாதனை படைத்து உள்ளதாக அந்நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவையில் உள்ள வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தி நிறுவனம் கடந்த 2013 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது.இந்த நிறுவனத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.இந்த விவசாயிகள் தென்னை,பாக்கு,வாழை,காய்கறிகள் உள்ளிட்ட விவசாய பொருட்களை உற்பத்தி செய்து லாபம் ஈட்டி வருகின்றனர்.

இதில் இடைத்தரகர்கள் நீங்கி,விற்பனையான விளைப்பொருட்களுக்கான பணம் விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக உடனுடக்குடன் அனுப்பப்படுகிறது.இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஆண்டு பொதுக்குழு கூட்டம் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அந்நிறுவனத்தை சேர்ந்த உறுப்பினர்கள்,

“இந்த உற்பத்தி நிறுவனத்தின் மூலமாக இந்த நிதியாண்டில் மட்டும் ரூ.7.91கோடி வருமானம் ஈட்டி சாதனை படைத்து உள்ளதாக தெரிவித்தனர்.இந்த வேளாண் நிறுவனத்தின் மூலமாக,விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பது,மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை விவசாயிகள் மத்தியில் கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட பணிகளை ஈஷா அறக்கட்டளை மூலம் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.மேலும் சந்தை நிலவரப்படி விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும் வகையில் விற்பனை செய்வது போன்ற வழிமுறைகளை அளிப்பதாகவும் தெரிவித்தனர்.இதனால் இந்த நிறுவனம் தமிழகத்தில் சிறந்த உழவன் உற்பத்தி நிறுவனமாக உள்ளதாகவும் கூறினர்”.

மேலும் படிக்க