September 24, 2018
தண்டோரா குழு
மூலப்பொருட்களைத் தொடர்ந்து தொழிற்சாலைகளுக்கு மின்சாரமே பெரிய செலவு என்று இந்திய தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் (சிஐஐ) இயக்குனர் ஷோரப்ஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சார நுகர்வோர் சங்கத்தின் 20வது ஆண்டுவிழா கூட்டம் செப் 22ம் தேதி கோவையில் நடைபெற்றது.இதில் இந்திய தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் (சிஐஐ) இயக்குனர் ஷோரப்ஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர்,
“மின்சாரமே தொழிற்சாலைகளுக்கு இரண்டாவது மிகப் பெரிய செலவாக உள்ளது.மின்சார சிக்கனத்தை பயன்படுத்துவதே செலவை குறைக்க மிகச்சிறந்த வழி.
உலக அளவில் பெரிய தொழிற்சாலைகள் மின்சாரத்தை சிக்கனமாக கடைப்பிடிக்கின்றன.சூரிய மின் சக்தியை பயன்படுத்துவதன் மூலமாக கார்பன் வெளியீட்டையும் கணிசமாக குறைக்க முடியும்.பெங்களூர் விமான நிலையம் சூரிய மின் சக்தியை பயன்படுத்துகிறது.” என்றார்.