• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொதுமக்கள் இருதய நோய் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க மருத்துவர்கள் அறிவுரை

September 21, 2018 தண்டோரா குழு

இருதய நோய்கள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக இருதய தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.அதில் முதுநிலை நீரிழிவு நிபுணர் பாலமுருகன் மற்றும் முதுநிலை இதயவியல் நிபுணர் வைத்தியநாதன் ஆகியோர் பொதுமக்களுக்கு இதயநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையிலான கருத்துக்களை தெரவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள்,

“உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒன்றே முக்கால் கோடி பேர் இருதய நோயால் தங்களது இன்னுயிரை இழப்பதாக கூறுகிறார்கள்.அதில் 75 லட்சம் பேர் மாரடைப்பாலும் 67 லட்சம் பேர் வாத நோயாலும் இறக்கின்றனர்.இளம் வயதில் ஏற்படும் இருதய நோய்கள் புகைப் பழக்கம்,கட்டுப்பாடில்லாத மதுப் பழக்கம், முட்டை,இறைச்சி,நெய் போன்ற கெட்ட கொழுப்புகள் நிறைந்த உணவுகளை அளவுக்கு அதிகமாக உண்ணுதல்,அளவுக்கு அதிகமான உடல் எடை, உடற்பயிற்சியின்மை போன்றவை முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன.

உலகில் 13 சதவிகித இருத நோயால் ஏற்படும் மரணங்கள் ரத்த அழுத்தத்தாலும்,9 சதவிகிதம் புகைப்பழக்கத்தாலும்,6 சதவிகிதம் நீரிழிவு மற்றும் உடற்பயிற்சி இன்மையாலும்,5 சதவிகித மரணம் அதிக உடல் எடையால் ஏற்படுவதாக மருத்துவ வல்லுநர்கள் கறுகின்றனர்.எனவே இருத நோய்களிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்வு வாழ தீய பழக்கங்களிலிருந்து நம்மை பாதுகாப்பதன் அவசியம் குறித்து அறிவுறுத்தினர்.வாரத்திற்கு இருமுறை அல்லது மூன்று நாட்களாவது எளிதான யோகாசனம் மற்றும் மிதமான உடற்பயிற்சியும் இருதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும்”. என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க