September 21, 2018
தண்டோரா குழு
கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 103 வயது மூதாட்டி ரங்கம்மா திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்த்து தெரிவித்தார்.
கோவை மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 103 வயது மூதாட்டி ரங்கம்மா.70 ஆண்டுகளாக திமுகவில் இருந்து வரும் இவர் அவருடைய கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராகவும்,திமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வருகிறார்.இந்நிலையில்,இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“கலைஞரை நேரில் சந்திக்க வேண்டிய எண்ணம் இருந்தது.ஆனால் நிறைவேறாமல் போன நிலையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் சந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.