• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அப்போலோவில் இருந்து வீடு திரும்பினார்

September 27, 2018 தண்டோரா குழு

அப்போலோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் வீடு திரும்பினாா்.

கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவர்,கடந்த ஒருவருட காலமாக தொடர் பிரச்சாரங்கள் மற்றும் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில்,சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார்.வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகத் தான் அவா் அனுமதிக்கப்பட்டுள்ளாா் என்று கட்சி சாா்பில் தொிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று காலை,அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.அதில்,திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வலது தொடையில் இருந்த கட்டி சிறிய அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது.இன்று மதியம் அவர் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் மு.க.ஸ்டாலின் மருத்துவ சிகிச்சை முடிந்து வீடு திரும்பினாா்.

மேலும் படிக்க