• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்டாலின் எந்த வழக்கு தொடர்ந்தாலும் சந்திப்போம் – அமைச்சர் ஜெயக்குமார்

September 22, 2018 தண்டோரா குழு

ஸ்டாலின் எந்த வழக்கு தொடர்ந்தாலும் சந்திப்போம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“பியூட்டி பார்லர்,பிரியாணி கடை பஞ்சாயத்துகளை பார்ப்பதற்கே திமுக தலைவருக்கு நேரம் சரியாக இருக்கிறது.மின்துறை தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயாராக இருக்கிறோம்.திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது.ஊழல் குறித்து பேச திமுக,காங்கிரசுக்கு தகுதி இல்லை.ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தடையாக இருக்கிறது.ஸ்டாலின் அதைக் கண்டிக்காதது ஏன்? ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது மூடப்பட்டது தான்,திறக்கப்படும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.மேலும்,என்னை அரிச்சந்திரன் என கூறிய கருணாஸுக்கு நன்றி.சாதி ரீதியாக பேசிய கருணாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.லொடுக்கு பாண்டியாக இருந்து நாக்கில் சனி வந்துள்ளது அவருக்கு இன்னும் என்ன என்ன பட போகிறார் என்பது தெரியவில்லை.அவரது பேச்சுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ள நிலையில்,திமுக தலைவரான ஸ்டாலின் இன்னும் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினார்”.

மேலும் படிக்க