• Download mobile app
05 May 2026, TuesdayEdition - 3737
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெளிமாவட்ட காவல்துறை அதிகாரிகள் உடனடியாக சென்னை வர டி.ஜி.பி உத்தரவு

August 7, 2018 தண்டோரா குழு

வெளிமாவட்ட காவல்துறை அதிகாரிகள் உடனடியாக சென்னை வர தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காவிரி மருத்துவமனையில் கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.இதற்கிடையில்,காவிரி மருத்துவமனை நேற்று வெளியிட்ட அறிக்கையில்,கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது,24 மணி நேரம் தீவிர கண்காணிப்பில் இருந்தால் மட்டுமே கூற முடியும் என தெரிவித்திருந்தது.

இதற்கிடையில்,காவிரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளார்.திமுக தலைவர் கருணாநிதி கவலைக்கிடமாக இருக்கும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில்,வெளிமாவட்ட காவல்துறை அதிகாரிகள் உடனடியாக சென்னை வர தமிழக டிஜிபி டிகே ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.மேலும்,தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மண்டல காவல்துறை தலைவர்கள்,துணைத் தலைவர்கள்,எஸ்பிக்கள், ஆணையர்களுக்கு டிஜிபி ஆணை பிறப்பித்துள்ளார்.அதைபோல் டி.எஸ்.பிக்கள்,ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் சீருடைகளுடன் காவல் நிலையங்களுக்கு பணிக்கு திரும்பவும் விடுமுறையில் இருக்கும் காவலர்களும் உடனடியாக பணிக்கு திரும்பவும் டிஜிபி உத்திரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க