• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவேரி மருத்துவமனை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

August 7, 2018

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காவிரி மருத்துவமனையில் கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.இதற்கிடையில்,காவிரி மருத்துவமனை நேற்று வெளியிட்ட அறிக்கையில்,கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் 24 மணி நேரம் தீவிர கண்காணிப்பில் இருந்தால் மட்டுமே கூற முடியும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இச்செய்தியை அறிந்த திமுக தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவியத் தொடங்கி வா!வா!தலைவா எழுந்து வா தலைவா என கோஷமிட்டு வருகின்றனர்.கருணாநிதியின் உடல் நிலை கவலைக்கிடமாகி உள்ளதால் தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க நிர்வாகிகள் காவேரி மருத்துவமனையில் கூடியுள்ளனர்.

தொண்டர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால் காவேரி மருத்துவமனை பகுதியில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.காவேரி மருத்துவமனையில் 2 துணை ஆணையர்கள்,4 உதவி ஆணையர்கள் தலைமையில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில்,நேற்றிரவே சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் மயிலாப்பூர் துணை ஆணையர் அலுவலகத்தில்,போக்குவரத்து மற்றும் காவல் துணை ஆணையர்களுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.இந்நிலையில் சென்னை மாநகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.சென்னை நகரின் முக்கிய பகுதிகளில் போலீஸார் அதிகளவு குவிக்கப்பட்டு உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் 1200 போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.இதில்,
ஆயுதப்படை காவலர்கள் 500 பேரும்,தமிழக சிறப்பு காவல்படை வீரர்கள் 700 பேரும் இதில் உள்ளனர்.
மேலும்,சென்னையில் உள்ள 135 காவல் நிலையங்களில் இருந்து தலா 5 காவலர்கள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க