• Download mobile app
02 Feb 2026, MondayEdition - 3645
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய தமிழக அரசு மறுப்பு

August 7, 2018 தண்டோரா குழு

திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவருடைய மறைவுக்கு பிரதமர்,குடியரசுத் தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மெரினாவில் அடக்கம் செய்வதற்கு அனுமதி கேட்டனர்.இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க இயல்வில்லை என்றும்,காமராஜர் நினைவகத்துக்கு அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக உள்ளது.

முக்கிய பிரமுகர்கள்,பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ராஜாஜி ஹாலில் கருணாநிதி உடலை வைக்க அனுமதி,கருணாநிதிக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யவும்,அத்தருணத்தில் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடவும்,மேலும் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்வதாகவும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க