• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து நடிகர் விவேக் நலம் விசாரிப்பு

August 1, 2018 தண்டோரா குழு

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக நடிகர் விவேக்,இன்று காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக மருத்துவகண்காணிப்பில் இருந்து வந்தார்.இதற்கிடையில்,கடந்த ஜூலை 27-ம் தேதி இரவு கருணாநிதிக்கு ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டதால் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து,மாநில மற்றும் தேசிய அளவில் இருந்து அரசியல் கட்சி தலைவர்களும் பல்வேறு முக்கிய பிரபலங்களும் காவிரி மருத்துவமனைக்கு சென்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் கலைஞரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்த நடிகர் விஜய், மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று மதியளவில் நடிகர் விவேக்,கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார்.பின்னர் பேசிய நடிகர் விவேக்,திமுக தலைவர் கருணாநிதி பூரண நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும்,திமுக தலைவர் கருணாநிதி தமிழ் பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

மேலும் படிக்க