• Download mobile app
01 Oct 2026, ThursdayEdition - 3886
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெல்டா மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்

November 19, 2018 தண்டோரா குழு

டெல்டா மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

“நேற்று தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தென் மேற்குவங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.நாளைமேற்கு நோக்கி நகர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரி அருகே நிலைபெறும்.இதன் காரணமாக,இன்று மாலை முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.நாகை,திருவாரூர்,தஞ்சை, புதுக்கோட்டை,சிவகங்கை,கடலூர்,ராமநாதபுரம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது.நாளை மற்றும் நாளை மறுநாள் உள்மாவட்டங்களிலும் மழைபெய்ய வாய்ப்பிருக்கிறது.சென்னையை பொறுத்தவரை லேசானது முதல் மிதமான மழைபெய்ய வாய்ப்பிருக்கிறது.மீனவர்கள் 20,21ம் தேதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம்.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் 7 செ.மீ.,கோவை மாவட்டம்,மேட்டுபாளையத்தில் 6 செ.மீ., மழை பெய்துள்ளது”.இவ்வாறு கூறினார்.

மேலும் படிக்க