September 5, 2018
தண்டோரா குழு
கோவை பெரியநாயக்கன்பாளையம் YSCC கிரிக்கெட் அணி சார்பாக ஐந்தாம் ஆண்டு கிரிக்கெட் விளையாட்டு போட்டி(ஒரு நாள் விளையாட்டு போட்டி) வருகிற செப் 9ம் தேதி கோவை பெரியநாயக்கன்பாளையம் UIT கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.
ஐந்தாம் ஆண்டு YSCC கிரிக்கெட் அணி நடத்தும் இந்த கிரிக்கெட் விளையாட்டு போட்டிக்கு கோவை பெரியநாயக்கன்பாளையம் திமுக ஒன்றிய பொறுப்பாளர் அ.அறிவரசு அவர்கள் முன்னிலை வகிக்கிறார்.
நாக்வுட்முறையில் நடைபெறும் இந்த கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன.ஒவ்வொரு அணிக்கும் 6 ஓவர்கள் வீதம்,ஒவ்வொரு அணியிலும் 6 பேர் விளையாடவுள்ளனர்.
இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக 10,000 ரூபாயும்,இரண்டாம் பரிசாக 6000 ரூபாயும்,மூன்றாம் பரிசாக 3000 ரூபாயும்,நான்காம் பரிசாக 1500 ரூபாயும் வழங்கப்படுகிறது.
மேலும்,இந்த போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசு கோப்பையை திரு.தீபன் பாபு(Album Clothings) அவர்களும்,இரண்டாம் பரிசு கோப்பையை திரு.எஸ்.ராஜா அவர்களும்,மூன்றாம் பரிசு கோப்பையை திருமதி.கலைவாணி செந்தில்குமார்(SK Motors,YAMAHA ShowRoom)அவர்களும் வழங்கவுள்ளார்கள்.இந்த போட்டி தொடரில் சிறந்த பேட்ஸ்மேன் விருதும்,சிறந்த பந்து வீச்சாளர் விருதும் வழங்கப்படவுள்ளது.