September 12, 2018
தண்டோரா குழு
கோவை அருகே மதுபோதையில் தொடர்ந்து கணவர் தகராறில் ஈடுபட்டு வந்ததால்,ஆத்திரம் அடைந்த அவரது மனைவி கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை செய்துள்ளார்.
கோவையை அடுத்த செட்டிபாளையம் பகுதியில் வசித்து வந்த ஞானம் என்பவர் தொடர்ந்து மதுபோதையில் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்து உள்ளார்.இந்நிலையில்,ஆத்திரம் அடைந்த அவரது மனைவி உமாதேவி,கிரிக்கெட் பேட்டால் தனது கணவரை அடித்துக் கொன்றுள்ளார்.பிறகு சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அவர் உயிரிழந்து விட்டார்.இந்நிலையில் செட்டிபாளையம் காவல் துறையினர் உமாதேவியை கைது செய்து கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும்,ஞானம் உமாதேவி தம்பதியினருக்கு 16 வயதில் மாலினி என்ற மகளும்,7 வயதில் கவின் என்ற மகனும் உள்ளனர்.