• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அருகே ஊருக்குள் சுற்றித்திரிந்த காட்டு யானைகள்

November 30, 2018 தண்டோரா குழு

கோவையை அடுத்த துடியலூர் பகுதியில் இரவு குடியிருப்புக்கள் அதிகம் நிறைந்த பகுதிகளில் இரண்டு காட்டு யானைகள் உலா வந்தது.

கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை தாக்கியும்,பயர்களை சேதப்படுத்தியும் வருகிறது. இந்நிலையில் கோவையை அடுத்த துடியலூர் பகுதியில் நேற்று இரவில் ஊருக்குள் புகுந்த இரண்டு காட்டு யானைகள் வீட்டிற்கு முன்னாள் வைக்கப்பட்டு இருந்த செடிகளை சாப்பிட்டது.இதனால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

இரு யானைகளும் தொடர்ந்த பல மணி நேரமாக ஊருக்குள் உலா வந்தது.தொடர்ந்து காட்டு யானைகள் இவ்வாறு ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வர முடியாத சூழல் உருவாகி உள்ளது.ஏற்கெனவே காட்டு யானைகளை விரட்ட கும்கி யானைகளை கொண்டு வந்து நிறுத்தி வைத்திருக்கும் சூழலில்,அதையும் மீறி இந்த காட்டு யானைகள் ஊருக்குள் நுழைகின்றது.இதனால் உடனடியாக வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க