September 12, 2018
தண்டோரா குழு
உள்ளாட்சி துறை ஊழல் தொடர்பாக நிருபீத்தால் பதவி விலக இன்றே தயார் என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“உள்ளாட்சி துறை ஊழல் தொடர்பாக நிருபீத்தால் பதவி விலக இன்றே தயார்.கட்சி பதவியும் சேர்த்தே விலக தயார் எனக் கூறினார்.திமுக ஆட்சியில் 18 மணி நேரம் மின்வெட்டு இருந்தது.தற்போது தமிழகத்தில் மின்வெட்டு எங்கும் இல்லாமல் மின்மிகை மாநிலமாக உள்ளது.அம்மாவால் விரட்டியடிக்கப்பட்டவர் டிடிவி தினகரன்,அனைத்து ஜெயிலையும் பார்த்த அவர்,மீண்டும் ஜெயிலுக்கு செல்ல தயாராக உள்ளார்.மேலும்,திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பியூன் வேலை பார்க்கிறார்.அவருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை”.இவ்வாறுக் கூறினார்.