September 17, 2018
தண்டோரா குழு
ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் திருப்பாதுகை தரிசனம் நிகழ்ச்சி சுகுணா கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியை ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மகாசமாதி நூற்றாண்டு விழா,ஷீரடி ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் டிரஸ்ட் மற்றும் ஸ்ரீ ஷீரடி சாய் பக்தர்கள் பேரவை ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மகாசமாதி நூற்றாண்டு மகா உற்சவ விழா தொடக்க நிகழ்ச்சி 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது.அப்போது ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் திருப்பாதுகை தரிசன நிகழ்ச்சி கோவை சாய்பாபா காலனியில் உள்ள சாய்பாபா கோவிலில் நடந்தது.இதில் பாபாவின் திருப்பாதுகையை சுமார் இரண்டரை லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இந்நிலையில் ஷீரடி சாய்பாபாவின் மகாசமாதி நூற்றாண்டு விழா நிறைவிலும்,2வது முறையாக இன்று கோவைக்கு ஷீரடி சாய்பாபாவின் திருப்பாதுகை தரிசனம் நடைபெற்றது.
பாபாவின் திருப்பாதுகை 2வது முறையாக ஒரு நகருக்கு வருவது என்பது இதுவே முதல்முறை.ஷீரடி சாய்பாபாவின் திருப்பாதுகை தரிசனவிழாவிற்கு ஏராளமான பொதுமக்கள் கலந்து வழிபட்டு சென்றனர்.பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் கோயில் நிர்வாகம் சார்பில் செய்து தரப்பட்டது.மேலும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள்,மனவளர்ச்சி குன்றியோர் ஆகியோர்கள் தரிசனம் பெற தனிவழி மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.