• Download mobile app
05 Aug 2026, WednesdayEdition - 3829
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு திட்டம் மூலம் கோவையில் பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.45 ஆயிரம் டெபாசிட்

July 3, 2018 தண்டோரா குழு

கோவையை சேர்ந்த பெண்ணின் வங்கி கணக்கிற்கு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 45 ஆயிரம் பணம் டெபாசிட் ஆகி உள்ளது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வெள்ளமடை ஊராட்சி காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிருந்தா.இவர் சாமிநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள கனரா வங்கியில் கடந்த 2014 ம் ஆண்டு சேமிப்பு கணக்கு தொடங்கினார்.

இந்நிலையில் கடந்த 28ம்தேதி இவரது செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது.அதில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 45 ஆயிரம் ரூபாய் பணம் வந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து பிருந்தா தனது வங்கி கணக்கை சரிபார்த்த போது கணக்கில் ரூ.45 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பிருந்தா தனது கணவர் அன்புசெல்வனுடன் வங்கிக்கு சென்று வங்கி அதிகாரிகளை சந்தித்து இதுபற்றி தெரிவித்துள்ளார்.

அப்போது வங்கி அதிகாரி,பெண்கள் வீடு கட்டுவதற்காக மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஜ் யோஜனா திட்டம் மூலம் பணம் தருகிறது.அந்த திட்டத்தின் மூலம் உங்களுக்கு பணம் வந்திருக்கும் என்று கூறியுள்ளார்.ஆனால் பிருந்தா இதுவரை எந்த திட்டத்திற்காகவும் விண்ணப்பிக்கவில்லை என்றும்,அதனால் தனக்கு பணம் வருவதற்கு வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.பிரதான் மந்திரி ஆவாஜ் யோஜனா திட்டத்தின் மூலம் பணம் வருகிறது என்ற தகவல் கிடைத்தவுடன் அந்த பகுதி மக்கள் எல்லோரும் அந்த திட்டத்தில் சேர முயற்சி செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க