• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினி படம் வெளியாவதையொட்டி கோவையில் விடுமுறை அறிவித்த தனியார் நிறுவனம்

November 29, 2018 தண்டோரா குழு

ரஜினி 2.0 படம் இன்று வெளியாவதால்,கோவையிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

2.O திரைப்படம் வெளியாகி உள்ள சூழலில் ரசிகர்கள் உற்சாகமாக படத்தை ரசித்து வருகின்றனர்.இயக்குநர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு இன்று வெளியாகியுள்ள 2.O திரைப்படம் கோவையில் சுமார் 60 திரைகளில் திரையிடப்பட்டுள்ளது.ரசிகர்கள் படத்தை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினி படம் வெளியாவதையொட்டி கோவையிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு விடுப்பு அளிக்கப்பட்டு உள்ளது.சுமார் 3௦ க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் அந்த நிறுவனத்தில் ரஜினி படம் வெளியாகும் போது விடுப்பு அளிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.இதனால் கோவை சித்தாபுதூர் பகுதியில் அமைந்து உள்ள அந்த நிறுவனத்தில்,இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.மேலும் அந்த நிறுவனத்தில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் இலவச டிக்கெட்டுகளும் அளித்து அனைவரும் படம் பார்க்கும் வகையில் ஏற்பாடும் செய்துள்ளனர்.

மேலும் படிக்க