September 8, 2018
தண்டோரா குழு
கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனை சார்பில் இரண்டு நாள் கருத்தரங்கு பீளமேடு பகுதியில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெற்றது.இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து நுரையீரல் துறை மருத்துவ நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள் திரளாக கலந்துக் கொண்டனர்.இந்த முகாம் இன்றும் நாளையும் மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுகிறது.இந்த மருத்துவமனை முகாம் பேராசிரியர் திருமதி அனுபமா மூர்த்தி தலைமையில் நடைபெறுகிறது.
அதிவேக விஞ்ஞான வளர்ச்சியில் மருத்துவத்துறையில் நிகழும் இந்த காலகட்டத்தில் அத்தகைய வளர்ச்சிகளையும் புதிய கண்டுபிடிப்புகளையும் அரங்கேற்றம் செய்து நுரையீரல் துறை மருத்துவர்களுக்கு மற்றும் இந்த சமுதாயத்திற்கும் பயன் கொடுப்பது பற்றி மருத்துவ வல்லுநர்கள் தங்களுடைய கருத்தை கூறினார்கள்.
மேலும்,நுரையீரல் மருத்துவத்துறையில் 25 ஆண்டுகால தேவை நிறைவேறும் இந்த ஆண்டில் மதுரையை சேர்ந்த மருத்துவர்கள் இத்தகைய கருத்தரங்கை நடத்தியது குறிப்பிடத்தக்கது.இந்த மாநாட்டில் தென்னிந்தியா முழுவதும் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட நுரையீரல் துறை பயிற்சி மருத்துவர்கள் கலந்துக் கொண்டனர்.இந்த மாநாட்டின் மூலம் அவர்களின் அறிவுத்திறன் மற்றும் தொழில் திறனை மேம்படுத்துவது இதன் நோக்கம் என்று மருத்துவர்கள் கூறினார்கள்.