September 6, 2018
தண்டோரா குழு
கோவை தமிழ்நாடு காவலர் அருங்காட்சியகத்திற்கு ரோட்டரி கிளப் சார்பாக “2018 தொழில் சிறப்பு விருது” வழங்கப்பட்டது.
கோவையில் தமிழ்நாடு காவலர் அருங்காட்சியகம் நாட்டின் தனித்துவம் வாய்ந்த அருங்காட்சியகமாகும்.இது 1918 ல் உருவாக்கப்பட்ட “ஹேமில்டன் காவலர் கூட்டுறவு விடுதி சங்கத்தை” மாற்றியமைத்து 2016 ஆம் ஆண்டில் கோவை காவலர் அருங்காட்சியகமாக உருவெடுத்தது.
இந்த அருங்காட்சியகத்தில் ஆயுதங்கள்,விருதுகள்,பதக்கங்கள்,கைப்பற்ற பட்ட ஆயுதங்கள்,காவலர்களின் பதவிகளை அறியும் விதமாக காவலர் சீருடைகள் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க பயன்படும் உபகரணங்கள்.மேலும் பல வகையான ஆயுதங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக முன்னாள் முதல்வர் MGR அவர்களுக்கு அப்போதய ரோட்டரி கிளப் கவர்னர் வரதராஜ் வழங்கிய வெள்ளி வாள் இன்றும் பாதுகாப்பாக காட்சிபடுத்தப்பட்டு உள்ளது.இதனை பெருமை படுத்தும் விதமாக ரோட்டரி கிளப்பின் தற்போதைய கவர்னர் பதி மற்றும் தலைவர் சசிகுமார் அவர்கள் இணைந்து “தொழில் சிறப்பு விருதினை” கோவை மாவட்ட போக்குவரத்து இணைஆணையாளர் சுஜித்குமார் IPS.அவர்களிடம் வழங்கினர்.