• Download mobile app
02 Feb 2026, MondayEdition - 3645
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பொது வேலை நிறுத்தம் காரணமாக கடைகள் அடைப்பு

September 10, 2018 தண்டோரா குழு

பெட்ரோல்,டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடைபெறும் பொது வேலை நிறுத்தம் காரணமாக கோவையில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.இதற்கு தமிழகத்தில் திமுக,காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.இதன் ஒரு பகுதியாக அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தையொட்டி கோவையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.70 சதவீத பேருந்துகள் ஆட்டோக்கள் மட்டும் இயக்கப்படுகிறது.

மேலும்,முக்கிய வணிக இடமான பெரிய கடைவீதி,ஒப்பனக்காரவீதி,குமரன் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது.கேரள செல்லும் பேருந்துகள் தமிழக எல்லையான வாளையாறு வரை மட்டும் இயக்கப்படுகிறது.காந்திபுரம்,உக்கடம்,சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க