September 19, 2018
தண்டோரா குழு
கோவை பேரூர் பட்டி விநாயகர் கோவிலில் உண்டியல் உடைத்து திருட முயன்ற மூன்று பேரில் ஒரு இளைஞரை சுற்றி வளைத்து பொது மக்கள் தர்ம அடி கொடுத்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் இருந்து ஆற்றுக்கு செல்லும் வழியில் இடதுபுறமாக பட்டி விநாயகர் கோவில் உள்ளது.ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்தக் கோயிலில் நேற்றிரவு எட்டரை மணியளவில் மூன்று திருடர்கள் பின்பக்க சுவற்றில் ஏறி கோவிலுக்குள் நுழைந்து உண்டியலை உடைத்துள்ளனர்.
அப்போது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் கோவிலை சுற்றி நின்றுக் கொண்டனர்.இதனையடுத்து கோவிலுக்குள் சென்று பார்த்த போது திருட முயற்சித்த மூன்று பேரில் இருவர் தப்பிவிட,ஒரு இளைஞர் மட்டும் மாட்டிக்கொண்டார்.இதனையடுத்து திருடனை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து பேரூர் காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.மேலும்,காவல் துறையினர் தப்பியோடிய இருவர் குறித்து விசாரிக்காமல்,இரவு எட்டரை மணியளவில் எப்படி திருட வருவான் என அலட்சியமாக கூறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினார்.