• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முகதாடை அறுவை சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வு நடைபயணம்

September 27, 2018 தண்டோரா குழு

கோவையில் முகதாடை அறுவை சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வு நடைபயணம் இன்று நடைபெற்றது.

கோவையில் முகம் மற்றும் தாடை அறுவை சிகிச்சை நிபுணர்கள் சார்பில் முகம் தாடை அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. கோவை நேரு விளையாட்டரங்கில் துவங்கிய இந்த விழிப்புணர்வு நடைபயணத்தை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பாரி(IPS) கொடியசைத்து துவக்கி வைத்தார்.5கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த நடைபயணத்தில் கல்லூரி மாணவ மாணவிகள்,செவிலியர்கள்,பெண்கள் முதியவர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் கண்ணன் கூறுகையில்,

“முகம் மற்றும் தாடை அறுவை சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த நடைபயணம் நடைபெற்று உள்ளதாகவும்,தமிழகத்தில் கடந்த 7 நாட்களாக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது.இந்த அறுவை சிகிச்சை சாலை விபத்துக்கள் மற்றும் பான்மசாலா,குட்கா,புகையிலை,பீடி, சிகரெட் போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவதால் பாதிக்கபட்டு புற்று நோயால் அவதிபடுவர்களுக்கு இந்த அறுவை சிகிச்சை அதிகம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்

மேலும் வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்,இளைஞர்கள் புகையிலை போன்ற போதை பொருட்களை பயன்படுத்த கூடாது என்பதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.தற்போது நாட்டில் 4 நிமிடத்திற்கு ஒருவர் விபத்துக்களில் உயிரிழிப்பதாகவும், விரைவில் இது 3 நிமிடங்களுக்கு ஒருவர் என அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவே அனைவரும் தலைக்கவசம் அணிந்த வாகனபயணத்தை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்”.

மேலும் படிக்க