• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நீராபானம் விற்பனையை தொடங்கிய தென்னை விவசாயிகள்

July 31, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் 10 தென்னை உற்பத்தியாளர் கூட்டமைப்புகள்,65 தென்னை உற்பத்தியாளர் சங்கங்கள்,2159 தென்னை விவசாயிகளும்,1500 நபர்கள் பங்குதாரர்களாக உள்ள விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் நீராபானம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் விற்பனை செய்யப்பட்டது.

நீரா பானம் தென்னம் பாளைகளிலிருந்து வடித்தெடுக்கப்படும் இளம் பழுப்பு நிறமுள்ள தித்திப்பான தாவரச்சாறு ஆகும்.இதில் அதிகளவு இரும்புச்சத்தும்,பாஸ்பரஸ் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் அடங்கியுள்ளதால் இருதய நோய்,சிறுநீரக கல் அடைப்பு,கல்லீரல்,ஆஸ்துமா,இரத்த சோகை போன்ற நோய்களை குணப்படுத்தக்கூடியது.

நீரா பானம் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களான நீரா க்ரிஸ்டல் சுகர்,நீரா ஹனி,நீரா பால்கோவா, தேங்காய் பர்ப்பி போன்ற பொருட்கள் உயர்தரமான முறையில் தயாரிக்கப்பட்டு தற்போது விற்பனை செய்யப்படுகிறது.நீரா பானத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருபது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க