• Download mobile app
11 Aug 2026, TuesdayEdition - 3835
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேர்தலை முன்னிட்டு அவதூறு தன் மீது அவதூறு பரப்புவதாக கோவையில் திமுக நிர்வாகி புகார் மனு

March 20, 2026 தண்டோரா குழு

கோவை செல்வபுரம் பகுதி 79வது வடக்கழகம் திமுக செயலாளராக உள்ள எம். எச் இப்ராஹீம் புகைப்படத்துடன் கட்சியில் பணிபுரியும் சில பெண்களின் புகைபடத்தை இணைத்து ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்டு இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதனை தொடர்ந்து திமுக 79வது வட்டக் கழகச் செயலாளர் எம்.எச் இப்ராஹிம் கோவை மாநகர காவல் ஆணையத்தில் இன்று புகார் மனு அளித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில்,

கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் எனது கட்சியில் பணியாற்றி வரும் சில பெண்களின் புகைப்படத்தை என்னுடன் இணைத்து ஆபாசமாக சித்தரித்துள்ளனர். தேர்தல் வரும் நேரங்களில் எனது பெயருக்கு அவதுறு ஏபேடும் வகையில் கட்சியில் களங்கப்படுத்தும் நோக்கில் ஒரு சிலர் இதுபோன்று செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏ.ஐ, ஜெமினி போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களின் மூலம் இந்த நாசவேலை செய்து வருகின்றனர். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். இதனை செய்தது யார் என்பதை காவல்துறையினர் கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க