September 27, 2018
தண்டோரா குழு
கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் அந்தோணி.இவர் அப்பகுதியில் அன்னை வாட்டர் சர்விஸ் நடத்தி கொண்டு வருகிறார்.இவரது மனைவியான குமாரி(28). இவர்களுக்கிடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளதாக தெரிகிறது.இந்நிலையில் குமாரி அவரது மகனான ஹேன்ட்ரி (6) ஆகிய இருவரும் ரத்தினபுரியில் உள்ள தன்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலையில் ஈடுபட்டுள்ளனர்.இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும்,இது கொலையா? தற்கொலையா? என்று ரத்தினபுரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.