• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாடாளுமன்ற தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகி வருகிறது – கமல்ஹாசன்

September 19, 2018 தண்டோரா குழு

கோவையில் மக்கள் நீதி மையத்தின் பயிலரங்கம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.இந்த பயிலரங்கில் தேர்தல் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கபட்டதாகவும், தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என நிர்வாகிகள் தெரிவித்து இருப்பதாகவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“இந்த பயிலரங்கில் பலதுறை சார்ந்த வல்லுனர்கள் கலந்துக் கொண்டு தேர்தலை எதிர்கொள்ளும் முறை குறித்து பயிற்சி அளித்தனர்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பிரச்சார ஆலோகர் அவினாஷ் கலந்துக் கொண்டு பயிற்சி அளித்துள்ளதாகவும்,இதுபோன்ற பயிற்சி முகாம்கள் தொடர்ந்து நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.இந்த பயிலரங்கில் தேர்தலை எதிர்கொள்ளும் முறை உட்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

பெட்ரோல்,டீசல் விலை மக்கள் நலன் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பது தங்களின் நிலைப்பாடு.பா.ஜ.கவினர் கருத்திற்கு எதிர்கருத்து சொல்லக் கூடாது என நினைக்கின்றனர்,அது ஜனநாயக நாட்டில் ஒத்து வராத ஒரு விஷயம்.திருப்பரங்குன்றம்,திருவாரூர் இடைத்தேர்தலில் கலந்துக் கொள்ள போவதில்லை எனவும், தேர்தலை உன்னிப்பாக கவனிப்போம்,விமர்சிப்போம்,மக்களுக்கு நல்லதை சொல்வோம் என தெரிவித்தார்.

மேலும்,இதைவிட பெரிய தேர்தல்களம் வருவதால் அதற்கு தயாராகி வருகின்றோம் எனவும்,உள்ளாட்சி தேர்தலில் தலையிட வேண்டாம் என நினைக்கின்றோம்.7 பேர் விடுதலை தொடர்பான சட்டவிவகாரம் இவ்வளவு நாள் தாமதப்பட்ட பின்னர் இப்போது அவசரப்பட கூடாது எனவும்,எது நியாயமான விஷயமோ, நேர்மையான விஷயமா அது கட்டாயம் நடக்க வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருவதாகவும்,யாராக இருந்தாலும் நீதிமன்றத்தையும்,காவல்துறையும் விமர்சிக்க கூடாது.அதிமுகவினர் சப்பானி என படத்தின் கேரக்டரை சொல்லி பேசும் போது,அதற்கு பதிலுக்கு நாம் ஏதாவது சொன்னால் வருத்தப்படுவார்கள்.

மேலும்,தேர்தல் போட்டியிடுவது குறித்து இந்த பயிலரங்கில் ஆலோசித்து வருவதாகவும்,தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என நிர்வாகிகள் சொல்கின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு விட்டது.மாற்றம் மாற்றம் என பேசிக்கொண்டு இருக்காமல் மாற்றமாகவே செயல்பட்டு வருவதாகவும்,தலைமை செயலகத்தில் இருந்த ஊழல் சிறை வரை பரவி இருக்கிறது.சினிமாவை பற்றி எதுவும் பேசாததால் முழுமையான அரசியல்வாதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்”.இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க