September 7, 2018
தண்டோரா குழு
கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயுள் காப்பீட்டு முகவர் சம்மேளம் சார்பில் 50 க்கும் மேற்பட்டோர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலிசிதாரர்களுக்கு பாலிசியின் மீது வழங்கபடும் போனஸ் தொகையை உயர்த்த வேண்டும்,பிரிமிய தொகையின் மீதும்,தாமத கட்டணத்தின் மீது விதிக்கப்படும்
ஜி.எஸ்.டி வரியை நீக்க வேண்டும்,லாபம் ஈட்டும் நிறுவனங்களில் மட்டும் எல்.ஐ.சி நிதியை முதலீடு செய்ய வேண்டும்,irdai நிர்ணயித்துள்ள அளவிற்கு முகவர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயுள் காப்பீட்டு முகவர்கள் கோவை அவினாசி சாலையிலுள்ள எல்.ஐ.சி அலுவலக வாயிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சட்டையில் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பாக வழங்கப்பட்ட கமிஷனையே இன்றும் வழங்கி வருவதாகவும்,கோரிக்கைகளை பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அடுத்த கட்டமாக மிகப்பெரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.