• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குனியமுத்தூர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி

August 10, 2018 தண்டோரா குழு

குனியமுத்தூர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி செய்து கொண்டதில் மனைவி பலியானார்.இதில் கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குனியமுத்தூர் ககாமராஜர் வீதி அய்யப்பன் நகரை சேர்ந்தவர் ஜானகிராமன்(45).இவரது மனைவி சசிகலா(36).இவர்களின் குழந்தைகள் சினேகா (17)மற்றும் பிரேமவர்ணா(13).இவர்கள் நேற்று இரவு விஷம் அருந்தி மயங்கிய நிலையில் வீட்டில் இருந்துள்ளனர்.

இந்நிலையில்,அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.இதில் இவர்களுக்கு நேற்று இரவு முதல் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.பின்னர் மேல் சிகிச்சைக்காக முதலில் மனைவி சசிகலாவை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் சசிகலா சிகிச்சை பலனின்றி சில மணி நேரத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் மற்ற மூன்று பேரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்ய முயன்றது கோவை மக்களை சோகத்தில் ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் குறித்து குனியமுத்தூர் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க