• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஹிந்து ஆலயப்பாதுகாப்பு குழுவின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றம்

September 18, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் இந்து ஆலயப்பாதுகாப்பு குழுவின் மரநில பொதுக்குழு கூட்டம் 16.09.2018 அன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் 13 மாவட்டங்களில் இருந்து 154 பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நினறவேற்றப்பட்டன.

1.நமது திருக்கோவிலில் பக்தியுடன் பூஜிக்கப்படும் உற்சவமூர்த்திகள் நமது முன்னோர்களால் நமக்கு கொடுக்கப்பட்ட விலை மதிப்பற்ற பொக்கிஷங்கள்.இவை காலங்காலமாக,ஆலயத்தில் பக்தியுடன் பூஜிக்கப்பட்டு உற்சவகாலங்களில் வீதி உலாவாக பக்தர்களின் இல்லங்கள் வரை எழுந்தருளி அருள் சேர்ப்பவை. விலைமதிப்பற்ற இந்த விக்ரகங்கள் பல தற்போது பாதுகாப்பு காரணங்களைக்காட்டி ஆலயத்திலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு அறைகளில் பூட்டி வைக்கப்பட்டுள்ளன.தினசரி பூஜை,நைவேத்தியம் போன்றவை இன்றியும் பக்தர்களை தரிசிக்க முடியாமலும் இம்மூர்த்திகள் சிறை வைக்கப்பட்டுள்ளது.மேலும் திருவிழா நாட்களில் பக்தர்கனன மிகவும் சிரமத்துக்குள்ளாக்கும் நடைமுறைகளை பின்பற்றிய பின்னரே இவ்விக்ரகங்களை ஆலயத்திற்க்கு கொண்டு வந்து திருவீதி உலா நிகழ்ச்சி நடத்த வேண்டிய நிலை உள்ளது.இந்த நிலையை மாற்றி,அந்தந்த ஆலயங்களில் இந்த விக்ரகங்களை பாதுகாப்புடன் வைத்து,நைவேத்தியம் நடைபெற ஆவன செய்ய வேண்டும்.

2.திருக்கோவிலில் பணியாளர்கள் காலியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த பணிகளுக்கு ஹிந்துதர்ம விஷயங்களில் ஞானமுள்ள ஹிந்துக்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்.கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை ஹிந்து தர்ம வீத்யா பீடத்தில் சமயத்துறை கல்விகற்று வித்யஜோதி பட்டம் பெற்றவர்களுக்கு இப்பணிகள் வழங்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

3.மதுனர மீனாட்சியம்மன் திருக்கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி நடந்த மிகப்பெரிய தீ விபத்தின் சேதங்களை மூடிமறைத்து வருகின்ற அரசினை கண்டிப்பதோடு இதுவரை சேதமடைந்த சுமார் 7 ஆயிரம் சதுரடி பழமையான கட்டுமானங்களை சீரமைக்க எந்த பணியோ மேற்கொள்ளாதிருப்பது பக்தர்களை வேதனைக்குள்ளாகியுள்ளது.இதனை உடனடியாக ஆகம வீதிகள் மாறாமல் சீரமைக்கும் பணிகளை துவங்குவதோடு,இந்த விபத்து குறித்து முழு உண்மைகளையும் கண்டறிய CBI விசாரணை நடத்த வேண்டும்.

4.சென்னை உயர் நீதிமன்ற மதுனரகிளை உத்திரவின்படி ஆலய வளாகங்களில் உள்ள வணிக நிறுவனங்களை அப்புறப்படுத்த உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வணிக நிறுவனங்கள் அகற்றப்பட வேண்டும்.அத்துடன் ஆலய சொத்து ரசீதுகள் மீட்கப்பட்டு,அவற்றிற்கு தற்போது சந்தை மதிப்பின்படி நியாய வாடகை நிர்ணயம் செய்ய நிர்வாகத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

5.ஆந்திரா தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் அரசுகள் ஹிந்து கோவில் சொத்துக்கள் ஹிந்துக்களுக்கு மட்டுமே வாடகைக்கு விடப்பட வேண்டும் என்ற உத்தரவினையும் தற்போது மாற்று மதத்தின் கைவசம் உள்ள சொத்துக்களை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என உத்திரவிட்டுள்ளனர்.சிறந்த உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள அந்த மாநில அரசுகளை பாரட்டுவதோடு அதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசினை வற்புறுத்தி தீர்மானம் நினறவேற்றப்பட்டது.

6.திருநெல்வேலி மாவட்டத்தில் 144 வருடங்களுக்கு ஒருமுனற நனடபெறும் புனித நீராட்டு நிகழ்ச்சி இவ்வாண்டு அக் 11 முதல் 23 வரை நடைபெறவுள்ளது.15 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வதாக உள்ள இந்நிசுழ்ச்சிக்கான,அனைத்து ஒத்துழைப்பு,ஒத்தாசையும் அரசின் வருவாய் துறை காவல்துறை மற்றும் சுகாதார துறை ஆசிய துறைகள் இணைந்து வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

7.ஹிந்து ஆலய பாதுகாப்பு குழு ஆரம்பித்து 50 ஆண்டுகள் நிறைவுறுவதை முன்னிட்டு மதுனரயில் வரும் டிசம்பர் 30 ஆம் ஆண்டு பொன்விழா மாநில மாநாடு நடைபெற உள்ளது.இதில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 10 ஆயிரம் பேர் கலந்துக் கொள்ள உள்ளனர்.

மேலும் படிக்க