• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கனமழை காரணமாக சிறுவாணி அணை முழு கொள்ளளவை எட்டியது

August 16, 2018 தண்டோரா குழு

மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கோவையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும்,சிறுவாணி அணை மீண்டும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக கோவை மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது.

இந்நிலையில் நேற்று முதல் அப்பகுதியில் கனமழை பெய்து வந்ததை அடுத்து,சிறுவாணி அணை அதன் முழு கொள்ளளவான 50 அடியை எட்டி உள்ளது.கடந்த நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை அடைந்தது.

இதனையடுத்து இரண்டாவது முறையாக தற்போது மீண்டும் அணை நிறைந்துள்ளது.சிறுவாணி அணையில் இருந்து கோவை நகருக்கு 114 எம்.எல்.டி நீர் வினியோகம் செய்து வரும் நிலையில், அணை நிரம்பியதை அடுத்து கூடுதல் நீர் வினியோகம் செய்யப்படும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் படிக்க